விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன்?

931

பூத கணங்களின் அதிபதியாக திகழ்வர் தான் விநாயகர்.விநாயகரை பூஜிக்கும் போது அவருக்கும் பிடித்த அருகம்புல் கொண்டு அவரை தரிப்பது வழக்கம்.விநாயகரை ஏன் அருகம்புல் கொண்டு தரிகக்கின்றார்கள் என்று தெரியுமா? இதற்கு ஒரு புராணக்கதை ஒன்றும் சொல்லப்படுகின்றது.

அனலாசுரன் என்ற அசுரன் விநாயகர் கோபத்தில் விழுங்கி விட்டார், அப்போது வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான்.விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை, அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார், அவரது எரிச்சல் அடங்கியது.அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான், அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.இதன் காரணமாகவே விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கியத்துவம் பெறுகின்றது.