டூயட் பட நடிகையா இது?- வைரலாகும் புகைப்படம்!!

697

கே. பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான படம் டூயட். பிரபு, மீனாட்சி சேஷாத்ரி, பிரகாஷ் ராஜ், ரமேஷ் அரவிந்த் என பலர் நடிப்பில் தயாரான இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட். அந்த படத்தில் நாயகியாக நடித்த மீனாட்சி அன்றைய காலத்தில் வெற்றி நாயகியாக வலம் வந்தார். ஆனால் இவர் தமிழை தாண்டி ஹிந்தியில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார், தெலுங்கிலும் சில படங்களே நடித்துள்ளார்.

சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வந்த அவர் 1995ம் ஆண்டு ஹரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இவருக்கு கெண்ரா என்ற மகளும், ஜோஷ், மேட் என்ற மகன்கள் உள்ளனர்.

தற்போது இவர் குடும்பத்துடன் உள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.