உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள்!

636

உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத போது கை கால்கள் மரத்து விடுதல், சிறு நீரகக் கோளாறுகள் உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.அவற்றை சரி செய்ய நம் உண்ணும் உணவில் எவைகளை சேர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாமா?

மிளகு:மிளகு மூலம் ரத்த நாளங்கள் விரிவடைகிறது. அதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக வேலை செய்கிறது. எனவே உணவில் மிளகு சேர்த்துக் கொள்வது ரத்த ஓட்டத்திற்கு நல்லது.

இஞ்சி:இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆகவே இஞ்சியை உணவில் அன்றாடம் இணைத்துக் கொள்வோம்.

பூண்டு:பூண்டு ரத்த நாளங்களில் உள்ள ஹைட்ரஜன் சல்பேட் டை அதிகரிக்கிறது. இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகிறது.

தக்காளி:தக்காளியில் உள்ள லைகோபைன் பிளேக் கட்டமைப்பை உடைத்து ரத்த ஓட்டம் தடையில்லாமல் இருக்க உதவி புரிகிறது.

வெங்காயம்:வெங்காயத்தில் உள்ள அல்லிசின் எனும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் முதன்மை பெறுகிறது. ஆகவே உணவில் தினமும் வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

க்ரீன் டீ:க்ரீன் டீயில் உள்ள எபிகேலோகேட்டசின் என்ற பொருள் செல்களின் ஆரோக்கியத்திற்கும் ரத்த ஓட்டத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது.

ஆகவே ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள உணவுகளை தினமும் உடலில் சேர்த்து வந்தால் ரத்த ஓட்டம் சீரடைய உதவி செய்யும் என்பது தெளிவாகிறது அல்லவா .கவனமாக உண்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.