விசித்திர நோயால் வாழ்வை இழந்த இளம்பெண்… பின் நிகழ்ந்த அதிசயம்!

744

வடஅமெரிக்காவின் மெக்ஸிக்கோ-வை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள விசித்திரமான நோயால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்!Lorena Bolanos, மெக்ஸிகோ-வை சேர்ந்த 24-வயது இளம்பெண். பிறக்கும் போது உடலின் பாதி அளவில் மச்சத்துடன் பிறந்துள்ளார். ஆரம்பத்தில் இது பார்ப்பவருக்கு வேடிக்கையாக தெரிந்தாலும் பின்னர் பூதாகரமாக மாறியுள்ளது.

பள்ளி நாட்களில் இவரது நண்பர்கள் இவரை பகடிக்கு ஆளாக்க நாட்கள் இல்லை. மனவருத்தத்துடன் இருந்தவரை அவரது தாயார், ஒருவேலை இவருக்கு இருப்பது தட்டமையாக இருக்கலாம் என மருத்துவரை அனுகினார். ஆனால் அவருக்கு இருப்பது சாதாரன மச்சங்கள் தான் என தெரிவித்துள்ளார்.

எனினும் பிறர் இவரை கேலி செய்கையில் தற்கொலை செய்துக்கொள்ளவும் முயற்சித்துள்ளார். முகப்புத்தகத்தில் இவரது புகைப்படத்தினை பதிவேற்றினால் போதும், இவரை கொச்சைப்படுத்த ஓர் கூட்டம் எப்போது தயாராக இருந்து வந்தது.பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்கையில் கிடைத்த நண்பர்கள் இவருக்கு சற்று ஆறுதலாய் அமைந்துள்ளனர், எனினும் சிறுவயது முதல் அவர் அனுபவித்த தழும்புகள் அவரை விடவில்லை.

அப்போது தான் அவரது நண்பர் ஒருவர், விசித்திர உடல் அமைப்புகள் என்னும் தலைப்பில் புகைப்படம் பிடித்தல் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். தன் தோழி Lorena Bolanos-ன் உடலின் மச்சங்களை தன் புகைப்பட திறமையால் மிகவும் அழகாகவே காட்டினார்.நடுவர்கள் முதல் அனைவரும் இவரை பாராட்ட மகிழ்ச்சியில் தவழ்ந்தார் Lorena Bolanos.

பிறரால் கேலி செய்யப்பட்ட மச்சங்களே தற்போது அவருக்கு புகழினை பெற்று தந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய அவர்… “வாழ்வதற்கு விருப்பம் இன்றி வாழ்ந்து வந்த என்னை, தன் நம்பிக்கையுடன் வாழ உந்தியது இந்நிகழ்வுதான்” என தெரிவித்துள்ளார்.தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.