பிரான்சில் 40,000 ஓரினச்சேர்க்கை திருமணங்கள்!

1023

பிரான்சில் ஐந்து ஆண்டுகளில் மட்டும் இதுவரை 40 ஆயிரம் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரான்சில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டு நேற்றோடு (23.04.2018) ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இதன்படி கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் 40,000 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக புள்ளி விவர அறிக்கை ஒன்று கூறுகிறது.இதில் கடந்த ஆண்டு மட்டும் 7000 திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டப்படி திருமணத்திற்குப் பின்னர், இத்தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளவும் அனுமதி உண்டு.

பிரான்சில் நடக்கும் அனைத்து திருமணங்களிலும் 3 சதவிகிதம் ஓரினச்சேர்க்கை திருமணமாக இருப்பதும், பாரிசில் இது 9.7 சதவீதமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.இருப்பினும் தற்போது ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொள்பவரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.