நோயாளியின் வயிற்றில் இருந்த 116 ஆணிகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

434

வயிற்றில் இருந்த 116 ஆணிகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது நபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான தொழிலாளி ஒருவர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதில் அவருடைய வயிற்றில் ஏதோ ஒன்று இருப்பதை போல தெரிந்துள்ளது. உடனே சி.டி.ஸ்கேன் எடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனை பார்த்த மருத்துவர் பெரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அவருடைய வயிற்றில் இருந்து சுமார் 6.5 செ.மீ அளவில் ஆணி, வயர்கள், இரும்புக்குண்டுகள் ஆகியவற்றை வெளியில் எடுத்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், நோயாளி சிறிதளவு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்தார். எங்களுடைய கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கவில்லை.

அவருடைய வயிற்றுக்குள் எப்படி சென்றது என்பது அவருக்கு தெரியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அவர் நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.