23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்ற தொடர் கொலைக்காரன்!!

1414

தொடர் கொலைக்காரன்

அமெரிக்காவில் தொடர் கொலைக்காரன் ஒருவன் 9 ஆண்டுகளில் 23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திறகு வந்துள்ளது.

55 வயதான ரொனால்ட் டொமினிக் என்ற நபரே இக்கொடூர கொலைகளை செய்துள்ளான். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி கைது செய்யப்பட்ட ரொனால்ட் டொமினிக், குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வீடற்ற ஆண்கள், போதைக்கு அடிமையான ஆண்களை கடத்தி செல்லும் ரொனால்ட், வீட்டில் அவர்களை கட்டி வைத்து துஷ்பிரேயாகம் செய்து கொன்றுள்ளான். பின்னர், உடல்களை லூசியானா பரோஷஸில் உள்ள கரும்பு காட்டிற்குள் புதைத்துள்ளான்.

இந்நிலையில், அவனிடமிருந்து தப்பித்து வந்த நபர் ஒருவர் அளித்த தகவலின் படி 2006 ஆம் ஆண்டு ரொனால்ட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், 23 பேரை கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

1997 முதல் 2006 வரை 23 பேரை கொன்றுள்ள ரொனால்டுக்கு எட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் அங்கோலாவின் லூசியானா மாகாண சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.