பத்திரிகையாளர்களை பார்த்து வெட்கப்பட்டு சிரித்த இளவரசர் ஜார்ஜ்: ஹாயாக கையசைத்த சார்லோட்!!

990

பிரித்தானிய இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியினருக்கு குட்டி இளவரசர் பிறந்துள்ளதாக பர்க்கிங்ஹாம் அரண்மணை அறிவித்துள்ளது.குழந்தை பிறந்த பின்னர், குழந்தையுடன் வெளியில் வந்த தம்பதியினர் வெளி உலகத்திற்கு குழந்தையை அறிமுகப்படுத்தியுள்ளனர். குழந்தையை பத்திரிகையாளர்கள் அதிகமாக புகைப்படம் எடுத்தனர்.

இதற்கிடையில், இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகிய இருவரும் தங்களது தம்பியை பார்ப்பதற்காக, தந்தை வில்லியம்முடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.காரில் இருந்து கீழே இறங்கிய இவர்களை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கையில், அவர்களை பார்த்து ஹாய் சொல்லுமாறு வில்லியம் இருவரிடமும் தெரிவித்தார்.

இளவரசர் ஜார்ஜ் வெட்கப்பட்டுக்கொண்டு கீழே குனிந்தவாறு சென்றுள்ளார். ஆனால் இளவரசி சார்லோட், தனது தந்தை சொல்வதை கேட்டு சார்லோட் பத்திரிகையாளர்களுக்கு தனது கையை காட்டி கூலாக ஹாய் சொன்னார், மருத்துவமனைக்குள் நுழைகையில் கூட சால்லோட் பின்னால் திரும்பி பார்த்து பத்திகையாளர்களுக்கு கையசைத்துள்ளார்,ஒரு பேட்டியின் போது, தனது மகனை விட மகள் சார்லோட் மிகவும் சுறுசுறுப்பானவள் என்று வில்லியம் கூறியது குறிப்பிடத்தக்கது.