ஒரு காலத்தில் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமா போவாரு… இன்று அழுக்கு உடையுடன் வாழும் தமிழர்.. யார் அவர்?

657

அழுக்கு உடையுடன் வாழும் தமிழர்

ஒரு காலத்தில் பணக்காரராக வெள்ளை வேட்டி சட்டையுடன் கம்பீரமாக வலம் வந்த தமிழர் ஒருவர் தற்போது வீடு வாசல் இல்லாமல் அழுக்கு உடையுடன் வாழ்ந்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூரை சேர்ந்தவர் புண்ணியகோடி. இவருக்கு வீடு கிடையாது. ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் பாலத்துக்கு அடியில் தான் வசிக்கிறார். ஒரு காலத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்த புண்ணியகோடி இன்று உணவுக்கு சிரமப்பட்டு அழுக்கு துணிகளை அணிந்தபடி உள்ளார்.

அவர் கூறுகையில், நான் ஒரு விவசாயி, 15 வயதில் இருந்தே அப்பா உடன் சேர்ந்து விவசாயம் செய்யத் தொடங்கினேன். இப்பவும் நிலம் இருக்கு. ஆனால், தரிசு நிலமாக இருப்பதால் விவசாயம் சரியா செய்ய முடியாத நிலை. மருந்து, கூலியிலயிருந்து ஆள் கூலி வரை எல்லாம் அதிகமாகிவிட்டது.

வேளாண்துறையிலயிருந்து விருதுலாம் கூட வாங்கியுள்ளேன்.
வேலை செய்ய ஆள் இல்லாததால் விவசாயத்தை நிறுத்தி 15 வருடம் ஆகிறது. திரும்பவும் விவசாயம் செய்ய ஆசை இருந்தாலும் 60 வயதில் இனி வேலை செய்ய உடம்பு ஒத்துழைக்காது.

வண்டலூர்ல இருந்த பணக்காரக் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்கள் அப்பா நல்லா சம்பாதிச்சு சொத்து சேர்த்தாரு. எங்கள் வீட்டுல மொத்தம் 8 பேரு. யாருக்கும் ஒற்றுமை கிடையாது. அப்பா இறந்ததும் மொத்த சொத்தையும் எடுத்துக்கிட்டாங்க, இதன்பின்னரே யாரையும் நம்பக் கூடாது என உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

புண்ணியகோடியைப் பற்றி அந்த பகுதி மக்கள் கூறுகையில், ஒரு காலத்தில் அவர் செமயா வாழ்ந்தார். வெள்ளை வேட்டி, சட்டை போட்டுட்டு நடந்து போவாரு. இப்போது பார்க்கவே பரிதாபமாக உள்ளது, இதற்கு நம்மால் என்ன செய்ய முடிவும் என கூறுகிறார்கள்.