2வது கணவன்…. 2 மாத குழந்தையை விட்டு.. டிக்டாக் பிரபலம் ஒரே ஓட்டம்!!

1440

கோவை….

கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கலையரசன்.. 22 வயதாகிறது.. இவர் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் கற்றுகொடுக்கும் மையம் நடத்தி வருகிறார்.

இவருக்கு பிரகலட்சுமி என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் கிடைத்தது.. பிரகலட்சுமிக்கம் 22 வயது.. சென்னையை சேர்ந்தவர்.. டிக்டாக் வீடியோ மூலம் நிறைய ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.

இவர்களின் நட்பு காதலாக கனிந்தது.. 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. ஒரு பெண் குழந்தை உள்ளது… இப்போது, 2 மாதங்களுக்கு முன்பு இன்னொரு பெண் குழந்தை கிரகலட்சுமிக்கு பிறந்துள்ளது..

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தம்பதிக்குள் நிறைய தகராறுகள் வந்துபோயுள்ளன.. ஒவ்வொரு முறையும் இவர்களுக்குள் சண்டை வந்தாலும், பிறகு இருவருமே சமாதானம் ஆகி கொள்வார்களாம்.. அப்படித்தான், சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. சண்டை போட்டுவிட்டு, கோபத்தில் கலையரசன் வெளியே சென்றுவிட்டார்.. சிறிது நேரம் கழித்து கலையரசனுக்கு போனை போட்ட பிரகலட்சுமி, வீட்டை விட்டே போவதாக சொல்லிவிட்டு, போனையும் கட் செய்துவிட்டார்..

இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசன் உடனே பிரகலட்சுமியை தொடர்பு கொண்டபோது, அவரது போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு எங்கெங்கோ மனைவியை தேடி அலைந்தார்.. எங்குமே அவர் கிடைக்கவில்லை.. அதனால் நொந்துபோன கலையரசன், மாயமான மனைவியை கண்டுபிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார்… புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, மாயமான டிக்டாக் பிரகலட்சுமியை தேடி வருகிறார்கள்… ஆனால், பிரகலட்சுமிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்..ஒரு பெண் குழந்தையும் அவருக்கு இருந்துள்ளது..

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதெல்லாம் தெரிந்துதான், கலையரசனும் அவரை விரும்பி திருமணம் செய்துள்ளார்.. மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்.. இவர் 10 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, பெண்ணுரிமைக்காக பகீரத முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.. அதன்படி, 10 டியூப்லைட்களை காலேயே நொறுக்கிகாட்டி வீடியோவும் வெளியிட்டிருந்தார்.. அதாவது தரையில் வரிசையாக 10 டியூப்லைட்டுகளை வைத்துவிட்டு, கையில் மேளம் அடித்துக் கொண்டே, அந்த லைட்டுகளை காலில் நொறுக்கி காட்டினார் பிரகலட்சுமி.

இந்த வீடியோ அப்போது இணையத்தில் வைரலாக பரவியது.. இப்போது பிரகலட்சுமிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. உண்மையிலேயே மாயமாகிவிட்டாரா? அல்லது எங்கே போயிருப்பார்? என்று தேடி வலைவீசி கொண்டிருக்கிறார்கள்.. அந்த 2வது குழந்தைக்கு 2 மாதம்தான் ஆகிறது.. உடம்பு சரியில்லையாம்.. தாயின்றி தவித்து, அழுது கொண்டே இருந்துள்ளது.. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்களாம்.