3வது கணவரால் கள்ளக்காதலிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

455

வேடசந்தூர்….

வேடசந்தூர் அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூலாங்குளம் பகுதியில் ரத்த காயங்களுடன் சாக்கு மூட்டை இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டது கீழ்தப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி (28) என்பது தெரிய வந்தது. இவரது கணவர் அமுல்ராஜ் (30). இவர், ஆந்திராவிற்கு கஞ்சா கடத்தி சென்றபோது, அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

தனியாக வசித்து வந்த பாண்டீஸ்வரிக்கு, வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டியை சேர்ந்த கவுசிக் பாண்டி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இரண்டு மாதமாக கௌசிக் பாண்டியும், பாண்டீஸ்வரியும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்தனர். கவுசிக் பாண்டி, பாண்டீஸ்வரியின் 3வது கணவர் ஆவார்.

இந்நிலையில், நேற்று காலை பாண்டீஸ்வரியுடன் ஏற்பட்ட தகராறில், கவுசிக் பாண்டி அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், பாண்டீஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துது பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளார் என தெரியவந்தது. பாண்டீஸ்வரியை கொலை செய்துவிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த கவுசிக் பாண்டியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டீஸ்வரியும், கவுசிக் பாண்டியும் செல்போன் மூலம் பல்வேறு நபர்களை தொடர்பு கொண்டு அவர்களை தனிமையான இடத்திற்கு வரவழைப்பது வழக்கம். அப்படி வருபவர்களிடம் பாண்டீஸ்வரி ஜாலியாக பேசிக் கொண்டிருப்பாராம்.

அப்போது மறைந்திருந்து வரும் கவுசிக் பாண்டி, ‘‘எப்படி எனது மனைவியுடன் பேசலாம்’’ என மிரட்டி அவர்கள் வைத்திருக்கும் பணம், நகைகளை பறித்துக் கொள்வது வழக்கம்.

இதை பங்கு போடுவதில் பாண்டீஸ்வரிக்கும், கவுசிக் பாண்டிக்கும் தகராறு ஏற்பட்ட போது கொலை நடந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.