3 வயது சிறுமியை கழுத்தறுத்து கொன்ற பெண் மந்திரவாதி : கதறி துடித்த பெற்றோர் : பகீர் பின்னணி!!

637

பெண் மந்திரவாதி

தமிழகத்தில் 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி – முருகாயி தம்பதியின் 3 வயது மகள் ஷாலினி கடந்த 26ஆம் திகதி மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார்.

நீண்ட நேரம் குழந்தையை தேடிய பெற்றோர், வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுப் பகுதியில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் மந்திரவாதி சின்னப்பொண்ணு என்பவரைப் பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக சிறுமியை நரபலி கொடுத்தேன் என அப்பெண் வாக்குமூலம் கொடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர். தொடர்ந்து சின்னபொண்ணுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.