ராஜஸ்தான்….

ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டம் ராவத் சர் ஹன்மங்கரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் கௌதம் ஷர்மா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார், மாணவிகள் பள்ளிக்கூடம் முடிந்தாலும் கூடுதலாக 2 மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தி வந்துள்ளார்,

அவர் அந்தப் பள்ளியில் ஸ்கேட்டிங் ஆசிரியர் ஆவார், இதே போல் ஸ்பெஷல் கிளாஷ் என கூறி 3 மாணவிகளை பள்ளிக் கூடம் வரவழைத்த அவர் அவர்கள் அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மாணவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவிகள் 2 மணி நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததை கண்ட பெற்றோர்கள் அவர்களை தேடி பள்ளிக் கூடம் வந்தனர் ஆனால் அவர்கள் அங்கு இல்லை, பின்னர் ஒரு வழியாக மாணவிகள் வீடு வந்து சேர்ந்தனர், பிற்கு அவர்களிடம் விசாரித்ததில் ஆசிரியர் தங்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றதை கூறியுள்ளனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் கௌதம் ஷர்மா மீது ராவத்சர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆசிரியர் ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் மாணவிகளை வரவழைத்து பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தனர்.

புகார் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் மாணவியின் பொற்றோர்கள் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உயரதிகார்கள் அவர்கள் சமாதானம் செய்தனர், பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் பாலியல் குற்றத்திற்கு ஆளாகியுள்ள இந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்,

பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் உயரதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர் .