300 கோடி ரூபாய் படத்திற்கு பேரம் : ராஜமௌலி படத்தை விட்டு விலகச்சொல்லி தயாரிப்பாளருக்கு நெருக்கடி!!

1068

ராஜமௌலி

ராஜமௌலி என்றால் இன்று அத்தனை பெரிக்கும் தெரிய காரணம் உலகளவில் புகழ்பெற்ற அவரின் படம் பாகுபலி தான். தென்னிந்திய சினிமாவில் வேற லெவலுக்கு எடுத்துச்சென்றது. வசூலையும் வாரிக் குவித்தது.

அவர் தற்போது RRR என்னும் படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இப்படத்தை டிவிவி தனய்யா என்பவர் ரூ300 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை ராஜமௌலி ஆரம்பித்ததும் படத்தை தன் வசம் ஒப்படைக்கும் படியும், ரூ 100 கோடி தருவதாக வேறு ஒரு தரப்பு தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுக்க அவர் முடியாது என மறுத்து விட்டாராம்.

ராஜமௌலியின் வாய்ப்பு இனி கிடைக்குமா என்ற எண்ணத்தில் எடுத்த முடிவால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படம் ஜூலை 20 ல் 2020 ல் வெளியாகவுள்ளது.