பெற்றோரின் திருமண நாளில் 17 பேருடன் விபத்தில் சிக்கி பலியான மகள் : சோக சம்பவம்!!

203

சோக சம்பவம்

துபாயில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எச்சரிக்கை பலகையின் மீது மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சுற்றுலா பேருந்து ஒன்று 31 பயணிகளுடன் ஏமனிலிருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணியளவில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எச்சரிக்கை பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் உட்பட பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பியோனா கெரஹாட்டி (28) என்கிற இளம்பெண் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அயர்லாந்தை சேர்ந்த பியோனா, 20 வயதுள்ள ஆண் நண்பருடன் அந்த பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் பியோனாவின் காதலனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது அந்த இளைஞரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் 40வது திருமண நாளை கொண்டாடி கொண்டிருந்த பியோனாவின் பெற்றோர் மகளின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான காரணம் என பொலிஸ் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா அல் மாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.