தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மாணவன் செய்த செயல்!!

164

மாணவன் செய்த செயல்

தமிழகத்தில் கல்லூரி தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி கே.கே. நகரை சேர்ந்த மாணவி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மூலம் அவரது நண்பர்கள் சரவணக்குமார், பாலாஜி ஆகியோர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில் தோழி மூலம் மாணவியின் செல்போன் நம்பரை பெற்ற சரவணக்குமார், அவரை உயிருக்கு உயிராக காதலிப்பதாக வசனம் பேசியுள்ளார். மாணவிக்கு முதலில் சாதாரண எஸ்எம்எஸ் அனுப்பியவர், நாளடைவில் ஆபாச எஸ்எம்எஸ்சை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி சரவணக்குமாரை கடுமையாக எச்சரித்து அனுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் ஒரு கட்டத்தில் தனது நண்பர்கள் அருண், அஸ்வின், பாலா மற்றொரு பாலா உள்ளிட்ட 4 பேருடன் மாணவி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் சரவணக்குமாரை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதுடன் மேலும் 2 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எடலைப்பட்டியில் உள்ள பசுமை பூங்காவிற்கு வரவேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன மாணவி சரவணக்குமாரை சந்திக்க சென்ற போது அவரிடம் பணம் வாங்கி கொண்டு, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தன்னுடைய நம்பரை பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்த அவர், தோழி போன் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் மாணவி தந்தையிடம் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் பொலிசார் போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு துணை போன 4 பேரையும் தேடி வருகின்றனர்.