மகனை 12 முறை கத்தியால் குத்தி, தலையை துண்டாக வெட்டி எடுத்த தாய்!!

192

தலையை துண்டாக வெட்டி எடுத்த தாய்

பிரேசில் நாட்டில் பெண்ணாக மாற ஆசைப்பட்ட 9 வயது மகனை பெற்ற தாயே, தலையை துண்டித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த ரோசனா காண்டிடோ (27) என்கிற தாய், கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கணவரிடம் இருந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

9 வயது மகன், மகள் மற்றும் காதலி கேசிலா பெஸ்ஸோ (28) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரோசனாவின் மகன் ருவான், தான் ஒரு பெண்ணாக மாற ஆசைப்படுவதாக தாயிடம் கூறியுள்ளான்.

இதனை கேட்டு கோபமடைந்த அவர், ருவானை 12 முறை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் அவனுடைய மர்ம உறுப்பு மற்றும் புருவங்களை அறுத்து எடுத்துள்ளார்.

உடலில் இருந்து தோலை அகற்றிவிட்டு, தலை உட்பட உடல்பாகங்களை துண்டுகளாக நறுக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை சமைத்தும், சிலவற்றை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசியும் எறிந்துள்ளனர்.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு ரோசனாவின் காதலி கேசிலா பெஸ்ஸோ முழு உடந்தையாக இருந்துள்ளார். ருவான் தங்களுக்கு ஒரு சுமையாக இருந்ததாகவும், அவன் மீது வெறுப்பு மட்டுமே இருந்தது, அன்பு இல்லை என பொலிஸாரிடம் கூறியுள்ளனர். இதற்கிடையில் மீட்கப்பட்ட 9 வயது மகள் தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ஒரு பயங்கரமான வழக்கு என பொலிஸார் கூறியுள்ளனர்.