அசுத்த ஆவிகளை துரத்துவதாக கூறி இளம்பெண்ணை சீரழித்த மந்திரவாதி : குமுறும் பெற்றோர்!!

124

இளம்பெண்ணை சீரழித்த மந்திரவாதி

ஐதராபாத் நகரில் இளம்பெண்ணின் உடம்பில் புகுந்துள்ள அசுத்த ஆவிகளை துரத்துவதாக கூறி அவரை சீரழித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள போரபந்தா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அஸம் என்ற பெயரில் அறியப்படும் அப்பகுதியில் உள்ள மந்திரவாதியே 19 வயதான யுவதியை பாலியல் பலாத்காரம் செய்தவர். பாதிக்கப்பட்ட யுவதியை குறித்த மந்திரவாதிக்கு முன்னரே பழக்கம் இருந்ததால், அடிக்கடி அவரது குடியிருப்புக்கு வந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில், குடியிருப்பில் அசுத்த ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இது ஆபத்தை வரவழைக்கும் என யுவதியின் பெற்றோரை அஸம் நம்ப வைத்துள்ளார். மட்டுமின்றி, பயப்பட தேவை இல்லை எனவும், அனைத்து பூசைகளையும் தாம் முன்னின்று நடத்த தயார் எனவும் அஸம், யுவதியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் ஒருபகுதியாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்கா ஒன்றில் சென்றில் வழிபாடு நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த யுவதியும் அவரது பெற்றோரும், மந்திரவாதி அஸமும் இணைந்து கர்நாடகா மாநிலம் பிடர் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்குவைத்து குறித்த யுவதியை சிகிச்சை என்ற பெயரில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். தொடர்ந்து ஐதராபாத் திரும்பிய பின்னரும் குறித்த யுவதியை பலாத்காரம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக ஒருமுறை கெட்ட ஆவிகளை துரத்த வேண்டும் என கூறி, யுவதியின் பெற்றோரை குடியிருப்புக்கு வெளியே அனுப்பி விட்டு, யுவதியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் யுவதி பெற்றோருக்கு தெரியப்படுத்தவே, கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசாரை நாடியுள்ளனர். இதனையடுத்து அந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.