பிகினி உடையில் விமான பணிப்பெண்கள் சேவை… இந்தியாவிலும் அறிமுகம்!!

698

பிகினி உடையில் விமானப்பணி செய்யும் பணிப்பெண்களின் சேவை இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக வியட்ஜெட் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வியட்நாம் நாட்டின், வியட்ஜெட் என்ற விமான நிறுவனம் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் விமானி முதல் பணிபெண்கள் வரை பிகினி உடையணிந்து பணி செய்வதை அறிமுகப்படுத்தியது. இதனால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

பல பிரச்சனைகளையும் மீறி இந்நிறுவனம் இன்றுவரையில் சேவையை நடத்தி வருகிறது. இதனால் வியட்ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 12 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம் வருகிற ஜூலை மாதம் முதல் இந்தியாவில் இச்சேவையை அறிமுகப்படுத்துவதாக தகவலை வெளியிட்டுள்ளது. வாரத்தில் 4 நாட்கள் வியட்நாமிலிருந்து டெல்லி வரை பிகினி ஏர்லைன்ஸ் சேவை துவங்கவுள்ளது.

இதுவரை வியட்நாம் தலைநகரிலிந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இல்லாததாலும் இரு நாடுகளின் 45ம் ஆண்டு தூதரக உறவை கொண்டாடும் விதமாக இது அமையுமாம். ஆனால் இச்சேவையை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என தகவல்களும் வெளியாகியுள்ளது.