அதிசய நபர்…….

செல்போன் மற்றும் கரண்ட் இல்லாமலேயே நபர் ஒருவர் வாழ்ந்து வரும் தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வாழ்க்கை முறையில் அனைவரிடமும் செல்போன் என்பது மிகப்பெரிய ஒரு அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது.
எது இல்லாமல் வேண்டுமானலும் இருப்பார்கள் ஆனால் செல்போன் இல்லாமல் உயிர்வாழவே முடியாது என பலரும் அந்த சூழ்நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார்கள். செல்போனால் நமக்கு பலவகைகளில் உதவியாக இருந்தாலும் அதன் மூலம் பல விளைவுகளும் ஏற்படத்தான் செய்கிறது.

அப்படி ஒரு விளைவினால் தவிப்பவர்தான் இந்த பிரிட்டனைச் சேர்ந்த புருனோ ஃ பாரிக். 48 வயதான புருனோவுக்கு மின்சாரம் மற்றும் மொபைல் என்றால் அலர்ஜி. காரணம் அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் அவரது உடலில் ஒருவித அலர்ஜி ஏற்படுகிறது.
மேலும், மருத்துவ துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைபர்சென்சிட்டிவிட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது வெறும் 31 கிலோ எடையுடன் வாழ்ந்து வரும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை மறவர்களை போல சாதாரணமாகத்தான் வாழந்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவர் செல்போன், மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். செல்போன் போன்ற சாதனங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு யாரையும் பாதிக்காது என்று சொல்ல முடியாது.
அதற்கு நான் ஒரு வாழும் உதாரணமாக இருப்பதாக புருனோ ஃ பாரிக் கூறியுள்ளார். இச்சம்பவமானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முடிந்த அளவு கைப்பேசியை விட்டு விலகியிருப்பது நமக்கு நல்ல பலனை அளிக்கும்..