கீரைகளை சமைக்கும் போது இதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்!

666

சரிவிகித உணவில் இன்றியமையாத உணவுப்பொருளான கீரைகளை தெரிவு செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம்.நமது அன்றாட உணவில் கீரை சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். கீரையானது ரத்தசோகை பிரச்சனைக்கு சிறந்த தீர்வைத் தரும்.

தாது உப்புக்களும், விட்டமின்களும் நிறைந்த கீரையை எப்படி தெரிவு செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து இங்கு காண்போம்.கீரைகள் குறுகிய காலப் பயிர்வகைகள் ஆகும். எனவே, இயற்கையான முறையில் பயிர் செய்யப்படும் கீரைகளை தெரிவு செய்ய வேண்டும்.கீரைகள் எப்போதும் வாடி வதங்கி இல்லாமல், Fresh ஆக இருக்க வேண்டும்.பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

பயன்படுத்தும் முறை:கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு, பிறகு அலச வேண்டும். அப்போது தான் அதில் உள்ள மண் போகும். மேலும் பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும்.பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளரும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சமைப்பதற்கு முன்பு கீரைகளை நீரில் நன்றாக கழுவுவது மிக அவசியம்.

கீரைகளை எப்போதும் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. பொதுமான அளவு வெந்திருந்தாலே போதும்.சிறிது அளவு நீரை ஊற்றி கீரைகளை வேக வைப்பது நல்லது.மழைக்காலம், வெயிற்காலம் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை உண்ணலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளை தெரிவு செய்ய வேண்டும்.

இரவு வேளைகளில் கீரைகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், கீரைகளில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகாது.கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்ற உணவுப்பொருட்களை சேர்த்து சமைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்சனைகள் உருவாகும்.கீரையை விட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.