அடிக்கும் வெயிலுக்கு குளிந்த நீரைக் குடிப்பவரா நீங்கள்?… இதைப் படியுங்கள்!!

644

பெரும்பாலான மக்கள் கோடை தாகத்தை தவிர்க்க குளிந்த நீர் குடிப்பது வழக்கம். குளிந்த நீர் குடித்தால் சற்று நேரத்திற்கு உடல் குளிர்ச்சி அடைந்த உணர்வு ஏற்படும். பின்னர் இயல்புநிலைக்குத் மாறிவிடும்.

குளிந்த நீர் குடிப்பது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஐஸ்க்ரீம்களால் சிலருக்கு பாதிப்பு ஏற்படலாம். ஐஸ்க்ரீம் சாப்பிடும் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. பல்சொத்தை, அலர்ஜி, தொண்டையில் பிரச்சனை உள்ளவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் தொல்லை ஏற்படலாம்.

குளிந்த நீர் குடிப்பதால் பிரச்சனை வராது. குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளிக்குக் காரணமான வைரஸ் கிருமிகள் உருவாகாது.

மருத்துவ ரீதியாக குளிந்த நீர் குடிப்பதால் பிரச்சனைகள் இல்லை. ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலும் கடைகளில் விற்பனை செய்யப்படுவது சுத்தமில்லாத மாசு நீர். இதனை குளிராக வைப்பதால் சுத்தமில்லாத நீர் மேலும் சுத்தமற்றதாக இருக்கும். இதனால் குளிந்த நீர் சற்று பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.