32 வயது பெண்ணை கடத்திய 20 வயது இளைஞன்!!

900

பெண்ணை கடத்திய இளைஞன்

தருமபுரி மாவட்டத்தில் 32 வயது பெண்ணை 20 வயது இளைஞன் கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி காந்தாமணி (32). இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாகவே கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்ட காந்தமணி கணவன் வீட்டிலிருந்து, அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி, காந்தமணி கிளம்பியுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவருடைய தந்தை ஐய்யண்ணன் , உறவினர்களின் வீடுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக தேடியுள்ளார்.

எங்கு தேடியும் மகள் கிடைக்காததை அடுத்து, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் பூவரசன் (20) என்பவர் தான் தன்னுடைய மகளை கடத்தியிருக்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.