அங்கு செல்லாதே எனக்கூறிய கணவன் : குழந்தையுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

278

மனைவி எடுத்த விபரீத முடிவு

அரியலூரில் உறவினரின் துக்க வீட்டுக்கு செல்லாதே என கணவன் கூறியதால், மனவேதனையடைந்த மனைவி குழந்தையுடன் சேர்ந்து தூக் கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய முதல் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதனையடுத்து சுமிதா என்பவரை வீட்டார் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதேபோல சுமிதாவின் முதல் கணவர் விபத்தில் இறந் துவிட்டார். இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு ரித்தீஷ் என்ற மகன் இருந்தார்.

இந்த நிலையில் சுமிதாவின் பெரியப்பா வீட்டில் துக்க நிகழ்வு நடந்துள்ளது. அங்கு தனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை எனக்கூறி அவருடைய கணவர் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த கீழ் வீட்டை சேர்ந்த நபர், ஜெயக்குமார் வெளியில் சென்றார், வாக்குவாதம் நின்றுவிடும் என நினைத்து வெளியில் அனுப்பியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து கோபத்தில் இருந்த சுமிதா, “எனக்குப் போட்ட நகைகளை வீட்டில் உள்ள பீரோ லாக்கரில் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொள்ளுங்கள்” என தன்னுடைய தாய்க்கு போன் செய்து கூறிவிட்டு சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

பின்னர் மகனை தூக் கில் மாட்டி கொன் றுவிட்டு, தானும் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுமிதாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.