போர் விமானத்தில் உயி ரிழந்த கணவன் : மனைவி எடுத்த சபதம்!!

675

மனைவி எடுத்த சபதம்

போர் விமான சோதனையின் போது கணவன் உயிரி ழந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், தகுதி தேர்வை முடிந்து அவருடைய மனைவி பணியில் சேர உள்ளார்.

கடந்த 5 மாதத்திற்கு முன்னதாக பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் மிராஜ் 2000 போர் விமானத்தின் சோதனை நடைபெற்றது. அப்போது நடந்த விபத்தில் விமானி சமீர் அப்ரோல் உயிரி ழந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய மனைவி கரிமா, “என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேநீரை கையில் கொடுத்தப்படி எனது கணவரை இந்த நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினேன்” என பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த நேரத்தில் விமானிகள் யாரும் அழுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், வாரணாசியில் உள்ள விமானப்படை தேர்வு வாரியத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு கரிமா தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவர் 2020 ஆம் ஆண்டில் டண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெற உள்ளார். பயிற்சி முடிந்ததும், விரைவில் தன்னுடைய கணவரின் பணியை தொடர்வார்.

இதுகுறித்து எழுத்தாளர் ஸ்வப்னில் பாண்டே, “நம்மில் பலர் ஒரு வாய்ப்பை இழந்தால் வாழ்வதற்கான வைராக்கியத்தை இழக்கிறோம், ஆனால் இங்கே இந்த பெண், அழிந்துபோவதை தேர்வு செய்யவில்லை – மாறாக கடினமாக உழைத்து, கண்ணீரைத் துடைத்து, விட்டு சென்ற தன்னுடைய கணவனின் காலணிகளை நிரப்ப உள்ளார்”.

“போலி பிரபலங்கள் பின் சுற்றி திரிவதை விட, இதுபோன்ற பெண்களை சந்தித்து உத்வேகம் அடைய வேண்டும். முரண்பாடுகளுக்கு மேலே உயர்ந்து, இன்னும், தலையை உயரமாக வைத்துக் கொண்டு சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்மாதிரியான பெண்களைப் பற்றி தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்குக் கற்றுக் கொடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

ஸ்வப்னில் பாண்டே கண்ட பேட்டியில் பேசிய கரிமா, “எனது கணவரது வாழ்க்கை எப்படி இருந்தது என பார்க்க விரும்பினேன். அவர் அணிந்த அதே சீருடையை அணிவது என்னை ஊக்கப்படுத்தும். மரபுகளை தொடர விரும்பினேன்” என தெரிவித்துள்ளார்.