நிறுத்தப்படுகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி : அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!!

243

பிக்பாஸ் நிகழ்ச்சி

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. தற்போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது போட்டியாளர்களை களம் இறக்க உள்ள நிலையில், தெலுங்குப் பிக் பாஸ் குறித்து பல்வேறு சர்ச் சையான புகா ர்கள் எழுந்து வருவதால், தென்னிந்தியாவில் பிக் பாஸ் பீவர் அதிகரித்திருக்கிறது.

நாகர்ஜுனா தொகுத்து வழங்க இருக்கும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் செக்ஸ் டீல் பேசியதாக பிரபல விஜே பரபரப்பு பு கார் கூறினார். மேலும், நடிகை ஒருவரும் பிக் பாஸ் குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்புக்கு முன்னரே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 யின் படப்பிடிப்பை நிறுத்துமாறு அதை தொகுத்து வழங்க இருக்கும் நாகர்ஜூனா கேட்டுக் கொண்டாராம். நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள நெகடிவ் பேச்சுகள் அடங்கிய பிறகு படபிடிப்பை தொடராலம், என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். இதனா, போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பவர்கள் கவலை அடைந்திருக்கிறார்களாம்.

ஆனால், நாகர்ஜுனாவின் வேண்டுகோளை சேனல் தரப்பு ஏற்றுக்கொண்டதா அல்லது மறுப்பு தெரிவித்ததா, என்று இதுவரை தெரியவில்லை. அதே சமயம், ஸ்பான்ஸ்கர்ளிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால், நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் ஒளிபரப்பு செய்வதில் மட்டும் சேனல் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.