தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர் : இறுதியில் நேர்ந்த சோகம்!!

239

பாம்பை திருப்பி கடித்த நபர்

இந்தியாவில் தன்னைக் கடித்த பாம்பு ஒன்றை பழி வாங்க, அதைக் கடித்தே கொன்ற ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Parvat Gala Baria (60), மக்காச்சோளக் கதிர்களை லொறியில் ஏற்றும் இடத்தின் அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மக்காச்சோளக் கதிர்களுக்குள் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்திருக்கிறது. அங்கிருந்த மற்றவர்கள் பாம்பைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க, Baria மட்டும் தான் ஏற்கனவே பாம்புகளைப் பிடித்திருப்பதாகக் கூறி அங்கேயே நின்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அந்த பாம்பு அவரது கையிலும், முகத்திலும் கொத்தியிருக்கிறது. அந்த பாம்பை பிடித்த Baria, அதை பழி வாங்குவதற்காக, பல்லால் கடித்தே கொன்றிருக்கிறார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது உயிர் பிரி ந்திருக்கிறது. இந்த சம்பவம் குஜராத்திலுள்ள Mahisagar என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.