ஆண்கள் கண்டிப்பாக இதன் தோலை சாப்பிடவும்! ஏன் தெரியுமா?

891

தர்பூசணியின் தோல் பகுதியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஆண்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும்.தர்பூசணி தோலினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

தர்பூசணியின் ஓட்டில் சிட்ருலின் என்ற அமினோ அமிலம் உள்ளதால், தசை வளர்ச்சிக்கு மிகவும் உதவும். எனவே முறையான உடற்பயிற்சி செய்பவர்கள் தவறாமல் இதனை சாப்பிட வேண்டும்.

உடல் எடையை குறைக்கவும் தர்பூசணியின் தோல் உதவும். ஏனெனில் இதில் நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள கடின உப்புக்களை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும்.

தர்பூசணியின் தோல் பகுதியில் உடல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சிறுநீரகத்தில் கிருமித் தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்கவும், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் தர்பூசணியின் தோல்பகுதி உதவும்.

தர்பூசணியின் தோலில் லைகோபென் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளதால், பலவித புற்றுநோய்களை வராமல் தடுக்க இது உதவும். குறிப்பாக ஆண்களை பாதிக்கும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவும்.

கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையன நீரை தர்பூசணி அளிக்கும். மேலும், இதன்மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மை, அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை நீக்கும்.

60 கிலோ எடை உள்ளவர்கள் தினமும் 6 கிலோ எடை அளவுள்ள தர்பூசணியை சாப்பிடலாம். எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தர்பூசணி மிகவும் உகந்தது.

ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க தர்பூசணி மிகவும் உதவும். மேலும், இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்ற உணவாகும்.

கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இந்த தர்பூசணி டயட்டை தவிர்க்க வேண்டும். ஏனெனில், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய எடையை சரியாக நிர்வகித்து வரவேண்டும். எனவே, அவர்கள் தர்பூசணியை தவிர்ப்பது நல்லது.