கடும் நோயால் போ ராடும் சகோதரனை தேற்றும் சகோதரி : நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்!!

142

நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்

அமெரிக்கவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனை அவனுடைய சகோதரி தேற்றும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 4 வயது பெக்கெட் பர்க் என்கிற சிறுவன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு கீமோதெரபி உள்ளிட்ட பிற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்ததால் பல மாதங்கள் மருத்துவமனையிலே கழிக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த சிறுவனை, அவனை விட 14 மாதம் மட்டுமே வயதில் மூத்த சகோதரி ஆப்ரி அதிக அக்கறையுடன் கவனித்து வருகிறார். இதனை புகைப்படமாக எடுத்துள்ள அவர்களுடைய தாய் கைட்லின் (28) மற்றும் அப்பா மத்தேயு ஆகியோர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவருடைய தாய் கூறுகையில், என்னுடைய குழந்தைகள் இருவரும் அதிக பாசத்துடன் இருப்பதை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயத்தில் என்னுடைய மகனை நினைத்தால் பெரும் வருத்தமாகவும் இருக்கிறது.

என்னுடைய மகனை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் சோபாவில் அமர வைப்பது வரை என்னுடைய மகள் தான் கவனித்து வருகிறார் என கூறியுள்ளார்