நீண்ட 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுக்காத இளம் தந்தை : மகன் இ றப்பதை வீடியோ அழைப்பில் பார்த்து அதிர்ச்சி!!

274

இளம் தந்தை

அமெரிக்காவில் கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாத இளம் தந்தை ஒருவர், தமது 8 வயது மகனை ப றிகொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வரும் Storment என்ற இளம் தந்தையே, தற்போது பணியை விடவும் குடும்பமே முக்கியம் என இளம் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு புதிதாக நிறுவனம் ஒன்றை துவங்கிய Storment அதன் பின்னர் வேலை என்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வந்துள்ளார். இந்த 8 ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூட ஒரு வாரத்திற்கும் அதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டதில்லை என்று கூறப்படுகிறது.

Storment மற்றும் ஜெசிகா பிராண்டஸ் தம்பதிக்கு 8 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு சிறு வயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது.

வேலைப் பழு காரணமாக தமது பிள்ளைகளிடம் பேசுவதோ மனைவியிடம் பேசுவதற்கோ நேரம் ஒதுக்காமல் வேலை வேலை என்றே பரபரப்பாக இயங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் காலையில், தமது மகன்களின் அறைக்கு சென்று வழக்கமாக பார்வையிட்டு செல்பவர் சம்பவத்தன்று, வேலை நிமித்தம் வீடியோ அழைப்பு ஒன்றில் மும்முரமாகியுள்ளார்.

இதனிடையே இரட்டை பிள்ளைகளில் ஒருவரான வில்லி Storment வலிப்பு நோய் காரணமாக ம ரணமடைந்துள்ளார். ஒரு அரை மணி நேரம் முன்னதாக தமது மகனின் அறைக்கு சென்று பார்த்திருந்தால் தற்போது இந்த நிலை தமக்கு ஏற்பட்டிருக்காது என அவர் வருந்தியுள்ளார்.