கொலஸ்ட்ராலை வேரோடு அழிக்கும் சக்தி முட்டையில் உண்டு! தினமும் சாப்பிடுங்கள்.

571

புரோட்டீன் அதிகம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் தான் முட்டை. இந்த முட்டையில் பல்வேறு முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது மற்றும் இது மிகச்சிறந்த காலை உணவும் கூட.ஒருவரது உடலுக்குத் தேவையான பி வைட்டமின்களை முட்டையில் இருந்து எளிதில் பெற முடியும்.

உடல்நல நிபுணர்களும் முட்டை ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளாகக் கூறுகிறார்கள். ஆய்வுகளிலும் காலை உணவில் செரில் போன்ற உணவுகளை உட்கொள்வதை விட முட்டை நிறைந்த காலை உணவை உட்கொள்வது சிறந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டை ஹேங் ஓவரை சரிசெய்யும் சிறப்பான உணவும் கூட. இதில் உள்ள அதிகளவிலான சிஸ்டைன் என்னும் அமினோ அமிலம், அசிடல்டிஹைடை உடைத்தெறிந்து, ஹேங் ஓவருக்கு காரணமானதை வேரோடு அழிக்கும்.

மேலும் முட்டை உடலில் இருந்து தேவையற்ற டாக்ஸின்களை வெளியேற்றவும் செய்யும்.தற்போது முட்டைகளில் போலி இருப்பதால், நல்ல ஆர்கானிக் முட்டைகளைத் தேடிப் பார்த்து வாங்கி உட்கொள்ளுங்கள். சரி, இப்போது முட்டைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் குறித்துக் காண்போம்.

மூளை வளர்ச்சிக்கு உதவும் முட்டையின் மஞ்சள் கருவில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமினான கோலைன் அதிகளவில் உள்ளது.கோலைன் நரம்புகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, அழற்சியைக் குறைக்கும்.முக்கியமாக கர்ப்பிணிகள் கோலைன் நிறைந்த முட்டையை சாப்பிட்டால், அது சிசுவின் மூளை வளர்ச்சிக்கு உதவும். இதனால் தான் கர்ப்பிணிகளை நிறைய முட்டை சாப்பிட சொல்கிறார்கள்

எடை குறைப்பு டயட்டில் இருப்போர் முட்டையை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏன் தெரியுமா? ஏனெனில் முட்டையில் உள்ள புரோட்டீன், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, நாள் முழுவதும் வயிறு நிறைந்த திருப்திகரமான உணர்வைக் கொடுக்கும். ஒரு பெரிய முட்டையில் 70 கலோரிகளும், 6 கிராம் புரோட்டீனும் உள்ளது. ஆகவே இது எடையைக் குறைப்போருக்கு சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது.