மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற கணவனுக்கு ஏற்பட்ட துயரம்!!

142

ஏற்பட்ட துயரம்

இந்தியாவில் மனைவியுடன் தேனிலவிற்கு சென்ற கணவன் படகு சவாரி விபத்தில் பரிதாபமாக இ றந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம், கரையாவட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி குமார்-சதிகுமாரி. இவர்களுக்கு ரஞ்சித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ரஞ்சித்திற்கு சமீபத்தில் தான், ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் இந்த ஜோடி தேனிலவிற்காக உத்திரப்பிரதேசம் சென்றுள்ளனர்.

அப்போது இவர்களுடன் உறவினர்கள் சிலரும் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த ஜோடி அங்கு படகு சவாரி செய்துள்ளனர். அப்போது எதிர்பாரத விதமாக, படகு அங்கிருக்கும் பாறையில் மோதியதால், விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் ரஞ்சித் பரிதாபமாக ப லியாக, மனைவி மற்றும் நண்பர்கள்(9 பேர்) காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகு விபத்தில் சிக்கிய போது, படகிற்கு அடியில் ரஞ்சித் சிக்கிவிட்டதாகவும், இதனால் அவரால் உ யிர் பிழைக்க முடியவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மகிழ்ச்சியாக தேனிலவிற்கு புது மண ஜோடி வந்த நிலையில், தற்போது அந்த பெண் கணவனை இழந்து நிற்பதால், குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர். இறந்த ரஞ்சித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.