பணத்துக்காக தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை மணக்கும் இளைஞர்!!

247

பணத்துக்காக..

53 வயதான பெண்ணும், 31 வயதான கருப்பின இளைஞரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ள நிலையில் பணத்துக்காக இளைஞர் இவ்வாறு செய்கிறாரா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா டீம் (53) என்ற பெண்ணும், நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் (31) என்ற ஆணும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் சந்தித்து கொண்ட நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

ஏஞ்சலா ஆறு குழந்தைகளுக்கு பாட்டியாகிவிட்ட நிலையில் அவரின் காதல் முதலில் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதோடு நைஜீரியாவில் தனது வேலையை உதறிதள்ளிய மைக்கேலுக்கு அதிகளவு பணம் கொடுத்து ஏஞ்சலா உதவினார்.

மைக்கேலுக்கும் அமெரிக்காவுக்கு வந்து பெரிய தொழில்கள் செய்து கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து பணத்துக்காகவே தன்னை விட 22 வயது அதிகமான ஏஞ்சலாவை அவர் மணக்க போகிறாரா என பலரும் கேள்வியெழுப்பினர்.

இந்த சூழலில் மைக்கேல் தன்னிடம் நிறைய பொய் சொல்கிறார் எனவும், அவரை பிரிய நினைப்பதாகவும் ஏஞ்சலா கூறினார்.

ஆனால் இருவருக்குள்ளும் சமாதானம் ஆன நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதனிடையில் மைக்கேலுக்கு குழந்தை வேண்டும் என ஆசை ஏற்பட்டது, ஆனால் ஏஞ்சலாவின் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்காத நிலையில் தனது மகள் ஸ்கைலாவின் கருமுட்டை மூலம் செயற்கை முறையில் குழந்தை பெற நினைத்தார் ஏஞ்சலா. ஆனால் ஸ்கைலா இதற்கு ஒப்பு கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

எப்படியிருந்தாலும் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர் என தெரிகிறது.