பசுவின் வயிற்றை சோதித்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி : உருக்கமாக பதிவிட்ட நடிகர் விவேக்!!

368

பசுவின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து சமூகத்துக்கு உருக்கமான செய்தியை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசு ஒன்று, சாணம் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து பசுவை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சென்று முனிரத்தினம் மருத்துவ பரிசோதனை செய்தார்.

அங்கு பசுவை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கழிவுப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பசுவின் வயிற்றை கிழித்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கூறுகையில், அன்பான மாணவர்களே, இளைஞர்களே, நமது அன்பான பசுவுக்கு நாம் செய்துள்ளதை பாருங்கள்.

இனியாவது, பிளாஸ்டிக் உபயோகிப்பதை நிறுத்தி நம்முடன் வாழும் உயிரினங்களை காப்பாற்றுவோம் என உருக்கமாக பதிவிட்டு தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு என்ற கவிஞர் கண்ணாதாசன் வரிகளை மேற்கோள் காட்டி பசுவின் பெருமை குறித்து பதிவிட்டுள்ளார்.