மகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெற்றோர்!!

304

லட்சக்கணக்கில் பணம்..

மகளை ஒரு தூண்டிலாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த லீனா கவிதா (43) மற்றும் பிரமோத் குமார் (45) என்கிற தம்பதியினரின் 21 வயது மகள், ஆன்லைன் மூலம் இளம் பல் மருத்துவரை சந்தித்துள்ளார்.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவருக்கும் இடையே உறவு வளர்ந்தவுடன், ஒன்றாக சிறிது நேரம் செலவிட ஒரு லாட்ஜுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், ஓட்டலுக்கு விரைந்து இருவரையும் கையும்களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த பல்மருத்துவரின் பெற்றோரின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை எடுத்துக்கொண்டு, தங்கள் மகளை லாட்ஜிலிருந்து அழைத்துச் சென்றனர்.

சில நாட்களுக்கு பிறகு எம்.இ.எஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும், பல் மருத்துவரின் தாயார் ஆஷலதாவைத் தொடர்பு கொண்டு, உங்களுடைய மகனும், எங்களுடைய மகளும் நெருக்கமாக இருக்கும் வீடியோ உள்ளது ரூ .1 கோடி செலுத்தப்பட்டால் இந்த பிரச்னையைத் தீர்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

அப்படி இல்லையெனில், அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும். பின்னர் அது வைரலாகி ஊடகங்களுக்கு பரவும். அதற்கு மேல், பல் மருத்துவர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளிப்பதாக லீனா, ஆஷலதாவிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்த ஆஷலதா, தம்பதியினர் இருவரையும் தனியாக ஒரு ஓட்டலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது தங்களுடைய மகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறியுள்ளனர்.

உடனே ஆஷலதா ரூ.22 லட்சத்திற்கு காசோலை கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய தம்பதி மறுநாள் போன் செய்து, கர்ப்பத்தை கலைக்க வேண்டும் எனக்கூறி பணம் கேட்டுள்ளனர்.

மீண்டும் ஆஷலதா ஆன்லைனில் அவர்களுடைய கணக்கிற்கு ரூ.20 லட்சம் பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பிறகும் கூட விடாத தம்பதி தொடர்ந்து 5 மாதங்களாக பணம் கேட்டு மி ரட்டி வந்துள்ளனர்.

இதனால் மனவேதனையடைந்த ஆஷலதா பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தம்பதியினர் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட இளம்பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.