சோளம், உள்ளிட்ட விவசாய பொருட்கள் பயிரிட்டோம்…. ஆனால் இன்று : சுர்ஜித் தந்தை கண்ணீர்!!

367

சுர்ஜித் தந்தை கண்ணீர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை சந்தித்து ஆறுதல் கூறியபோது அவர் வருத்தத்துடன் சிலவற்றை தெரிவித்துள்ளார்.

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோவை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரிட்டோ கூறியதாக சிலவற்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.

அதில், அந்த இடத்தில் 6 வருடங்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பின் அதை மூடிவிட்டு சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்ததாகவும், ஆனால், அது ஆபத்தான துளையாக இருக்கின்றது என்று அப்போது நினைக்கவில்லை.

எப்படியாவது என்குழந்தையை மீட்டுக்கொடுங்கள் என்று வேதனையுடன் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய திருமாவளவன், தமிழக அரசு வேகமாக செயல்படுகிறது என்பதை நாம் அறிவோம், மாவட்ட கண்காணிப்பாளர்கள், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் இங்கு உள்ளனர்.

40 மணி நேரத்திற்கு மேல் மீட்கப்படாமல் இருக்கும் இந்த சுழல் குழந்தையின் உயிர் குறித்து அச்சம் ஏற்படுத்துவதாக தெரிவித்தார். தொடர்ந்து, இன்னும் பலமணி நேரம்மாகும் என்பது வேதனையளிக்கிறது.

விண்வெளியில் வளர்சியடைந்த நாம், ஆழ்துளைகிணறிலிருந்து குழந்தையை மீட்க கருவி கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. இது தமிழக அரசிற்கு மட்டுமல்ல, இந்திய அரசிற்கே சவால். இதுபோன்ற துளை போடும் ஒவ்வொருவரும், பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.