லாறியில் ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு உ யிரிழந்த இளம்பெண் ஒருவரின் சோகப் பின்னணி!!

293

இளம்பெண் ஒருவரின் சோகப் பின்னணி

எப்படியாவது குடும்பத்தை கரைசேர்த்துவிட வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஒரு பெண்ணை க டத்தல்காரர்கள் பொய் சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்றதாக அவரது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் ஒன்றில் பயணித்து, பரிதாபமாக உ யிரிழந்தவர்களில் வியட்நாமிய பெண்ணான Pham Thi Tra My (26) ஒருவர்.

குடும்பக் கடனை தீர்ப்பதற்காக ஜப்பானுக்கு சென்று வேலை செய்தும் கடன் தீராததால், என்ன செய்வது என்ற கவலையில் இருந்த Tra Myயை அணுகிய க டத்தல்காரர்கள் 30,000 பவுண்டுகள் கொடுத்தால், அவரை ‘VIP’ டிக்கெட்டில் பிரித்தானியா அழைத்துச் செல்வதாக பொய் சொல்லியிருக்கிறார்கள்.

பாதுகாப்பான வழியில் Tra Myயை அனுப்புவதாக அவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்திருந்த நிலையில், அவர் இப்படி ஒரு லொறிக்குள் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவார் என்பது தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர் அவரது பெற்றோர்.

அந்த 30,000 பவுண்டுகளையும் தாங்கள் வாழும் வீட்டை அடகு வைத்துதான் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்கள் Tra Myயின் பெற்றோர்.

மகள் நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தபோதுதான் Tra Myயிடமிருந்து அந்த குறுஞ்செய்தி வந்தது.

மூச்சு விடமுடியாததால் சா கப்போகிறேன் அம்மா, உங்களை நேசிக்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என அவர் அனுப்பியிருந்த அந்த குறுஞ்செய்திகள், அவர்களை பதைபதைக்கச் செய்துள்ளன.

அத்துடன், தன்னை தொடர்புகொள்ள முயற்சிக்கவேண்டாம் என்றும், அதை தன்னை பிரித்தானியாவுக்கு அனுப்புபவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் செய்தி அனுப்பியிருக்கிறார் Tra My.

நேசித்த மகளையும் இ ழந்து, பணத்தையும் இழந்து, மேலும் கடனும் அதிகமாகி, என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் Tra Myயின் பெற்றோர்.

Tra My தனது சொந்த ஊரான வியட்நாமிலுள்ள Can Lộc என்ற ஊரிலிருந்து முதலில் சீனாவுக்கு சென்று, அங்கிருந்து பிரான்சுக்கு சென்றிருக்கிறார்.

ஏற்கனவே, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி ஒருமுறை, பிரித்தானிய எல்லைக்குள் நுழையும் முயற்சியின்போது பி டிபட்டு திருப்பி அனுப்பப்பட்ட Tra My, இம்முறை பிரித்தானியாவுக்குள் நுழையும்போது உ யிருடன் இல்லை என்பதுதான் தாங்க இயலாத சோகம்.