200 கோடி சொத்து : ஒரே குடும்பத்தில் 7 பேர் கொ லை!!

253

கேரளாவை உலுக்கும் மேலும் ஒரு சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த 17 ஆண்டுகளில் 7 பேர் ம ரணமடைந்துள்ள விவகாரத்தில் பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் பெண் ஒருவரால் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வி ஷம் வைத்து கொ ல்லப்பட்ட சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில்,

தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகள் பழைமையான குடியிருப்பு ஒன்றில், கடந்த 17 ஆண்டுகளில் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ம ர்மமான முறையில் ம ரணமடைந்துள்ளது தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ள இந்த இல்லத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயமாதவன் நாயர் என்பவர் கடைசியாக ம ரணமடைந்துள்ளார். இவரது உ டற்கூறு ஆய்வறிக்கையில் ம ரண காரணம் என்ன என்பது தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

இந்த குடும்பத்தாருக்கு திருவனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சொத்துக்களை கவனித்துவந்த ரவீந்திரன் நாயர் என்பவருக்கு ஜெயமாதவன் நாயர் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை எழுதிக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜெயமாதவன் நாயரின் உறவினரான பிரசன்னகுமாரி என்பவர் காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் ஜெயமாதவன் நாயர் குடும்பத்தில் நடந்த இரண்டு ம ரணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சொத்துக்களை கவனித்துவந்த சிலர் சொத்தின் சில பகுதிகளை அபகரித்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டது தொடர்பில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு கூடத்தாய் பகுதியில் 14 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ச யனைடு கொடுத்து கொ லை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,

தற்போது திருவனந்தபுரம் கரமன பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மர ணமடைந்துள்ளது திட்டமிட்ட கொ லையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.