போர்வெல் மூலம் மூன்று துளைகள் : எட்டியது 60 முதல் 70 அடி ஆழம் : தொடரும் சுர்ஜித் மீட்புப் பணி!!

431

சுர்ஜித் மீட்புப் பணி

ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகளில் முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது போர்வெல் கருவி மூலம் துழையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

நெடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுர்ஜித்தை மீட்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதில், முன்தாக பல முறைகள் கையளப்பட்டாலும் அனைத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக குழந்தை விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீற்றர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டது.

ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாக துளையிட முடியாமலும் இருந்தது.

இந்நிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தை கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையில் மூன்று துளைகளாக பிரித்து அதை அகலப்படுத்த தற்போது பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதல் துளையில் 60 முதல் 70அடி ஆழம் எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 35மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், குழந்தை துளையில் சிக்கி தற்போது 69 மணி நேரம் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.