இ றந்த தந்தைக்கு நான்கு ஆண்டுகளாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த பெண் : திடீரென ஒரு நாள் வந்த பதில்!!

343

தந்தைக்கு நான்கு ஆண்டுகளாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த பெண்

தனது தந்தை இ றந்தபின்னர் அவரது பிரிவால் வருந்திய ஒரு இளம்பெண், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவந்துள்ளார். ஒரு நாள் திடீரென அவரது தந்தையின் மொபைலிலிருந்து பதில் வர, திகைத்துப் போனார் அவர்.

மறுநாள், Newportஐச் சேர்ந்த Chastity Patterson (23)உடைய தந்தை இ றந்த நான்காவது ஆண்டு நினைவுநாள். தனது அன்றாட நிகழ்வுகளை தினமும் தனது தந்தையிடம் சொல்வதாக எண்ணி, அவரது பழைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது Chastityயின் வழக்கம்.

அன்றும் அவர், ஹாய் அப்பா, நான் தான்… நாளை மீண்டும் ஒரு கடினமான நாள், என்று ஒரு செய்தி அனுப்பிவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டார்.
அப்போது, குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக அவரது மொபைல் போன் ஒலி எழுப்ப, போனை எடுத்துப்பார்த்த Chastityக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அவர் தனது தந்தைக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் வந்திருந்தது. திகைத்துப்போன Chastity பரபரப்படைந்து, என்ன செய்தி வந்திருக்கிறது என்று பார்க்க, அதில், ஹாய் என் செல்லமே, நான் உன்னுடைய அப்பா இல்லை, ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து உன்னிடமிருந்து எனக்கு குறுஞ்செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

தினமும் காலையிலும் இரவிலும் உனது செய்திகளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என் பெயர் Brad, 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தொன்றில் எனது மகளை பறிகொடுத்துவிட்டேன். உனது செய்திகள்தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.

நீ எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போதெல்லாம், அது கடவுளிடம் இருந்து எனக்கு வரும் செய்தி என்றே எண்ணி அதை ஏற்றுக்கொள்கிறேன். உனக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று எண்ணுவேன், ஆனால் ஏற்கனவே அன்பிற்குரிய ஒருவரை இ ழந்து தவிக்கும் உன் இதயத்தை உடைக்க எனக்கு விருப்பமில்லாததால் உனக்கு நான் பதிலளிக்கவில்லை.

நீ அருமையான ஒரு பெண், எனது மகள் உ யிருடன் இருந்திருந்தால் அவளும் உன்னைப்போலவே ஆகியிருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கடவுள் இருக்கிறார் என்பதையும், எனது மகள் இ றந்ததற்கு அவருடைய தவறு காரணம் அல்ல என்றும் நீ எனக்கு நினைவுபடுத்துகிறாய். நீ எனக்கு கடவுள் தந்த குட்டி தேவதை.

இப்படி ஒரு நாள் வரும் என்பது என்பது நான் எதிர்பார்த்ததுதான், எல்லாம் சரியாகிவிடும், நன்றாக இரு என்று அந்த செய்தி கூறியது.

அதிர்ச்சியடைந்த அதே நேரத்தில், அந்த செய்தியால் தொடப்பட்ட Chastity, அந்த செய்தியை பேஸ்புக்கில் பகிர, அது வைரலாகியது. 265,000 பேர் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார்கள்.

கடவுள் இருக்கிறார் என்று கூறும் Chastity, நான்கு ஆண்டுகள் ஆனாலும், அவர் சரியான நேரத்தில் அதை நிரூபித்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.