ஆபாச பட நடிகராக இருந்து கணக்கு ஆசிரியராக மாறிய நபர்!!

660

இங்கிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், தான் இதற்கு முன்னர் ஆபாச பட நடிகராக பணியாற்றினேன் என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

East Sussex – இல் Peacehaven Community என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் Scott Sherwood(50)என்பவர் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், 2017 ஆம் ஆண்டுதான் பணிநியமனம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தான் கணக்கு ஆசிரியராக பணியாற்றுவதற்கு முன்பு அமெரிக்காவில் ஆபாச பட நடிகராக பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.

அந்த பணியின் போது தன்னுடன் பணியாற்றி துணை நடிகையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் செய்த இந்த தொழில் தனது தாய்க்கு பிடிக்கவில்லை என்றும் தற்போது இந்த தொழிலை விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த நேர்காணலை பார்த்த பள்ளி மாணவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

எங்கள் ஆசியரை ஒரு ஆபாச பட நடிகராக பார்ப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை, அவரை பார்க்க பயமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளனர். இதற்கிடையில், மாணவர்களின் பெற்றோர் மத்தியில் இந்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி, இருக்கும் ஒரு பள்ளியில் எப்படி எங்கள் குழந்தைகளை அனுப்புவது, இதற்கு பள்ளி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.