தனது சாமர்த்தியத்தால் பலரது உ யிரை காப்பாற்றி வியக்க வைத்த பெண் : குவியும் பாராட்டுகள்!!

509

கேரளாவில் வீட்டில் கேஸ் சிலிண்டர் தீ ப்பிடித்து எ ரிந்த நிலையில் பதட்டப்படாமல் அதை தண்ணீர் ஊற்றி அணைத்து பலரின் உ யிரை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வர்கலா நகரை சேர்ந்தவர் ருக்குயா பீவி (70). இவர் தனது வீட்டில் காலையில் கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது, அது லீக்காகி சிலிண்டரில் நெ ருப்பு பிடித்தது.

இதையடுத்து பயப்படாமல் மற்றும் ப தற்றப்படாமல் பீவி அந்த கேஸ் சிலிண்டரை வீட்டு வாசலுக்கு எடுத்து வந்து பைப் மூலம் தண்ணீரை அதன் மீது பீச்சி அடித்தார்.

இந்த தி கில் காட்சியை பீவியின் குடும்பத்தாரும், அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் எட்டி நின்று பார்த்து கொண்டிருந்தனர்.

இந்த சூழலில் தகவலறிந்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மீதி நெருப்பை அணைத்தனர்.

இதன் மூலம் பீவி தன் குடும்பத்தார் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினர் உ யிரை காப்பாற்றியதோடு வீட்டையும் காப்பாற்றினார்.

இதை தொடர்ந்து பீவியின் சாமர்த்தியம் மற்றும் தைரியத்தை கெளரவிக்கும் வகையில் அவருக்கு தீயணைப்பு துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.

மேலும் சமுதாயத்துக்கு பீவி ஒரு முன் உதாரணமாக உள்ளார் என தீயணைப்பு துறை அதிகாரி அவரை பாராட்டியுள்ளார்.