பிரசவத்திற்கு மூங்கிலில் தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி : கலங்க வைக்கும் காட்சி!!

184

தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மூங்கிலில் தூக்கிச்செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராமப் புற பகுதிகளில் அவசர உதவிக்கும், ச டலத்தைச் எடுத்துச் செல்வதற்கும் ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டு வருவது தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

2016ம் அண்டு ஒரிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட டானா மஜி, இ றந்த தனது மனைவியின் ச டலத்தை தோளில் சுமந்தபடி மகளுடன் சாலையில் நடந்துச்சென்றது நாட்டையே உலுக்கியது.

இந்த வரிசையில், தமிழகத்தின் ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டுள்ளது.

இதனயைடுத்து, உறவினர்கள் மூங்கிலில் தொட்டில் அமைத்து 6 கி.மீற்றர் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்பகுதியில் இருக்கும் மோசமான சாலைகளால் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.