பரீட்சை மிகவும் கடினம் : மகளின் வார்த்தையைக் கேட்டு நெஞ்சு வலியால் துடிதுடித்து இறந்த தந்தை!!

701

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மகளுக்கு துணையாக சென்ற தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு தெருவைச் சேர்ந்த தம்பதி கண்ணன்-நர்மதா. சொந்தமாக ஒயில் மில் நடத்தி வரும் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இதில் கடைசி பெண் தான் ஐஸ்வர்யா. அங்குள்ள தனியார் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த அவர் இன்று நடந்த நீட் தேர்விற்காக மதுரை திருமலைநாயக்கர் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அப்போது இவருடன் அவரது தந்தை சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்வு எழுதி முடித்து திரும்பிய ஐஸ்வர்யாவிடம் கண்ணன் தேர்வு வினாத் தாள் பற்றி கேட்டுள்ளார். அப்போது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறியதால், அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்துள்ளது.

இதனால் பதற்றமடைந்த ஐஸ்வர்யா உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்துள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்களோ இங்கு பார்க்க முடியாது என்று கூற, உடனே ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அது வரைக்கும் போராடிய மாணவி ஐஸ்வரியா தன் தந்தையை காப்பாற்ற முடியாமல் தவியாய் தவித்துள்ளார்.

அதன் பின் இது குறித்த தகவல் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் மருத்துவமனைக்கு வந்து கண்ணனின் உடலை பெற்றுச் சென்றுள்ளனர்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் பலி எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டாக உயர்ந்திருக்கிறது. இதற்கு முன் திருத்துறைப்பூண்டி யை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் இதேப் போன்று இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.