பத்து மாத குழந்தையை பைக்குள் அடைத்து காருக்குள் விட்டு சென்ற நபர் : குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

309

தனது காதலியின் பத்து மாத குழந்தையை தனது முதுகுப் பைக்குள் அடைந்து காரின் பின் பகுதிக்குள் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் ஒருவர்.

டெக்சாசைச் சேர்ந்த Trevor Marquis Rowe (27), தனது காதலியின் பத்து மாதக் குழந்தையான Marion Jester-Montoyaவுடன் பணிக்கு புறப்பட்டுள்ளார்.

அலுலகத்தின் முன்னால் வந்ததும், குழந்தையை தனது முதுகுப்பைக்குள் அடைத்து, அந்த பையை காருக்குள் வைத்துவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறார்.

பின்னர் சிற்றுண்டி இடைவேளையின்போது வந்து குழந்தையைப் பார்க்க, குழந்தை பைக்குள் இருந்து வெளியே வந்திருக்கிறது.

அதை மீண்டும் பைக்குள் அடைத்துவிட்டு வேலையை தொடர சென்றுள்ளார் Trevor. மீண்டும், மதிய இடைவேளையின்போது குழந்தை எப்படி இருக்கிறாள் என்று பார்க்க, அவள் அ ழுதுகொண்டிருந்திருக்கிறாள்.

மீண்டும் பைக்குள் குழந்தையை அடைத்த Trevor, இம்முறை அந்த பையை காரின் பின் பக்கத்தில் இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதிக்குள் (trunk) வைத்துவிட்டு சென்றிருந்திருக்கிறார்.

மாலை 5 மணிக்கு வேலை முடிந்து வந்து பார்த்தபோது, குழந்தை மூ ச்சு பேச்சில்லாமல் கிடக்கவே, 911ஐ அழைத்துவிட்டு குழந்தைக்கு முதலுதவி செய்ய முயன்றிருக்கிறார்.

விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் குழந்தையை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கு ழந்தை இ றந்துவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். Trevor மீது கொ லைக்கு ற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.