40 வருடங்களாக கட்சி சின்னத்தில் தாலி கட்டும் அதிசய கிராமம்; காரணம் என்ன தெரியுமா?

475

தங்கத்தாலி……………

அன்றைய காலக்கட்டத்தில், தமிழர்கள் பனை ஓலையைத் தாலியாகக் கட்டினார்கள் என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.

அதன் பின்னர், அது மஞ்சள் கயிறாக மாறியது. காலப்போக்கில் தங்கத்தாலி வழக்கத்துக்கு வர, அதில் தங்கள் குலதெய்வங்களின் படத்தைப் பொறித்தார்கள்.

அது இப்போது குலம், கோத்திரம் என்று பல்வேறு வடிவங்களில், பெண்களின் கழுத்தில், இதயத்துக்கு நெருக்கமாகத் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு நிலையில், கட்சி சின்னத்தையே தாலியாக கட்டும் அதிசய கிராமம் பற்றி தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விருத்தாசலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், உள்ள மு.பட்டி எனும் கிராமத்தித்தில் அரசியல் விழிப்புணர்வும் கொ ள் கைப் பி டி ப்பும் கொண்ட திராவிட கிராமமாகக் திகழும் மு.பட்டியில் உள்ள தி.மு.க.வினர்.

தங்கள் குடும்பத் திருமணங்களில், உதயசூரியன் சின்னத்தைத் தாலியில் பொறித்துக் கட்டுவதை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறார்களாம்.

அந்தவகையில், தற்போதும் கருணாநிதி – கண்ணகி தம்பதியரின் மகன் வைகோவிற்கும், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் – செந்தமிழ்ச்செல்வி தம்பதிகளின் மகள் இந்துமதிக்கும்,.

விருத்தாசலத்தில் உள்ள சபிதா திருமண மண்டபத்தில் சுயமரியாதைத் திருமணம் நடந்துகொண்டிருந்தது.

தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கணேசன் முன்னிலையில், திருச்சி சிவா எம்.பி. அந்த சீர்திருத்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமகள் கழுத்தில் உதயசூரியன் தாலியை மணமகன் கட்டினார்.