எனக்கு கொரோனா இல்லை : திருமணம் நடக்கவுள்ளது : சீனாவில் இருந்து இந்திய மணப்பெண்ணின் க ண்ணீர் வீடியோ!!

385

மணப்பெண்ணின் க ண்ணீர்

சீனாவில் உள்ள தன்னை எப்படியாவது ஊருக்கு அழைத்து வந்துவிடுங்கள் என இந்தியாவை சேர்ந்த மணப்பெண் க ண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் ஈர்னபாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வரும் 18-ஆம் திகதி நாள் முகூர்த்தத்துக்கு நாள் குறித்துள்ளனர்.

இந்நிலையில், வேலை விடயமாக சீனாவில் உள்ள வுஹானுக்கு கிளம்பி சென்றார் ஜோதி. அந்த சமயத்தில், கொரோனாவின் கொடூரம் சீனாவில் தாண்டவமாடியது. நகர் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க, இந்திய அரசு அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. ஜோதி அதன்படி பலரும் திரும்பி வருகின்றனர்.

அந்த வகையில், சீனாவில் சிக்கிக்கொண்ட ஜோதி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா வைரஸ் இல்லை, தன்னை உடனே கூட்டி செல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஜோதி உட்பட பல இந்தியரையும் மீட்க விமானம் தயாராக இருந்தது. ஜோதியும் அந்த விமானத்தில் வர தயாரானார்.

ஆனால் கிளம்புவதற்கு முன்பு அவரை பரிசோதித்தபோது, காய்ச்சல் இருந்தது. அதனால் ஜோதியை சீன அரசு இந்தியா அனுப்ப மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஜோதி திரும்பவும் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், எனக்கு வெறும் காய்ச்சல் மட்டும் தான் இருக்கு. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனக்கு கல்யாணம் ஆகவுள்ளது. என்னை சீக்கிரம் அழைத்து செல்லுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அந்தப்பகுதியில் சிக்கித் தவிக்கும் தங்கள் மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கும் ஜோதியின் பெற்றோர், மத்திய மாநில அரசுகள் தங்கள் மகளை மீட்க வேண்டும் என கோரியுள்ளனர்.