வளர்ப்பு மகனை கொ லை செய்த வழக்கு : விசாரணையில் இருந்து தப்பிய தம்பதி!!

426

வளர்ப்பு மகனை..

தத்தெடுத்த மகனையே கொ லை செய்த பிரித்தானிய தம்பதியை மனித உரிமைகள் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியாது என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு லண்டனில் குடியிருக்கும் காவல்ஜித்சிங் மகேந்திரசிங் ரைஜாதா(30) மற்றும் ஆர்தி திர்(55) ஆகியோர் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் உள்ள தங்கள் தத்தெடுத்த குழந்தையை கொ லை செய்ய ஏற்பாடு செய்ததாக கு ற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆர்தி மற்றும் அவரது கணவர் ஆகியோர் இந்தியாவில் ஒரு வாடகை கொ லையாளியை ஏற்பாடு செய்து ஆர்தி தத்தெடுத்துள்ள மகனை கொ ல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், விசாரணைக்காக காவல்ஜித்சிங் மற்றும் ஆர்தி தம்பதியை ஒப்படைக்க முடியாது என பிரித்தானிய நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

பிரித்தானிய நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசாங்கம் மேல்முறையீட்டு செய்தது. ஆனால் அந்த முயற்சியில் இந்திய அரசாங்கம் தோல்வியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபால் செஜனி என்ற தமது 11 வயது வளர்ப்பு மகனை கொ லை செய்வதன் மூலம் சுமார் 150,000 பவுண்டுகளை காப்பீடு தொகையாக பெறலாம் என்ற ஆர்தியின் திட்டமே தற்போது, அவரது கணவர் காவல்ஜித்சிங்கை இரட்டைக் கொ லை வ ழக்கில் சிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கேஷோட் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் பத்திரிகையில் லண்டனுக்கு அழைத்து வர ஒரு குழந்தையை தத்தெடுக்க இருப்பதாக விளம்பரம் ஒன்றை ஆர்தி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆர்தி கோபால் செஜனி என்ற சிறுவனை தத்தெடுக்க முடிவு செய்தார், மட்டுமின்றி உடனடியாக கோபால் பெயரில் காப்பீடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு கோபால் மற்றும் அவரது சகோதரியின் கணவர் கர்தானி ஆகிய இருவரும் ராஜ்கோட்டுக்கு விசா தொடர்பில் விசாரிக்க சென்றுள்ளனர்.

அப்போது திடீரென்று அ டித்த கு ம்பல், கர்தானியை கொ டூரமாக அ டித்துவிட்டு கோபாலுடன் மா யமானது. ஆனால் கோபால் கா யங்களுடன் மீ ட்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்தார்.

மட்டுமின்றி, சிகிச்சையில் இருந்து வந்த கர்தானியும் ஒரு மாதத்திற்கு பின்னர் ம ரணமடைந்தார். மேலும், கோபாலின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காப்பீடு தொகை வழக்கு விசாரணை காரணமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த கொ லைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், பிரித்தானியர்களான காவல்ஜித்சிங் மற்றும் ஆர்தி தம்பதிகளே காப்பீடு தொகைக்காக கோபாலை கொ லை செய்ததும், கார்தானி கொ ல்லப்பட்டதும் என உறுதி செய்தனர்.