மண்ணில் புதைப்பதைவிட… மகனை இழந்த சோ கத்திலும் மனிதநேயம் காட்டிய பெற்றோர்!!

477

மனிதநேயம்..

தமிழகத்தின் சேலம் அருகே மூளைச்சாவு அடைந்த இ ளைஞரின் உ டல் பா கங்களை பெற்றோர் தானமாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் – ராணி தம்பதியின் மகன் சுரேந்திரன். இவர் கடந்த 8 ஆம் திகதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி ப டுகாயம் அடைந்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறினர். குறித்த தகவலால் அ திர்ச்சி ஒரு பக்கம் இருந்த போதிலும், மகனின் உ டல் உ றுப்புகளை தானமாக வழங்க சுரேந்திரனின் பெற்றோர் முன்வந்தனர்.

இதனையடுத்து, சுரேந்திரனின் இருதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட ஏழு உறுப்புகள் வெவ்வேறு இடங்களுக்கு தானமாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. காவல்துறை உதவியோடு இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு,

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து காமலாபுரம் விமான நிலையம் கொண்டு செல்வதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. சுரேந்திரனின் உடலில் இருந்து பத்திரமாக பிரித்தெடுக்கப்பட்ட இருதயம், பின்னர் ஆம்புலன்ஸின் மூலம் விமான நிலையம் புறப்பட்டது.

ஆம்புலன்ஸ் செல்லும் சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்ததால், 25 கிலோ மீற்றர் தூரத்தை 18 நிமிடங்களில் கடந்து இருதயத்தை விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக இருதயம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மண்ணில் புதைப்பதைவிட உறுப்புகளைத் தானம் கொடுத்தால் அவன் இன்னொருவருடைய உருவத்தில் வாழ்ந்துகொண்டிருப்பான் என்று முடிவெடுத்து உடல்தானம் செய்தோம் என சுரேந்திரனின் பெற்றோர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.