திடீரென பாய்ந்தோடி வந்த வெள்ளம் : உ யிர் ப யத்தில் 10 மணி நேரமாக மரத்தை பற்றிக்கொண்டு தப்பிய நபர்!!

486

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தின்போது மரத்தை பிடித்து கொண்டு உதவிகேட்டு க த்திய நபர், 10 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பெகா நகரத்திற்கு அருகே, பல மாதங்களாக வறண்ட ஆறுகள் உள்ள பகுதியில் நேற்று சில மணி நேரங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் ப்ரோகோ ஆற்றில் ப யங்கர வெள்ளம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ஒரு நபர், வறண்ட ஆற்றில் நடைபயணம் மேற்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென வெள்ளம் பா ய்ந்தோடி வந்துள்ளது. இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக அங்கிருந்த மரம் ஒன்றை இறுக பிடித்தபடியே உதவி கேட்டு கூ ச்சலிட்டு கொண்டிருந்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த மீ ட்பு ப டையினர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரை பத்திரமாக மீ ட்டனர்.

பல மணி நேரம் தண்ணீரில் இருந்ததால், மீட்கப்பட்டபோது அவர் தாழ்வெப்பநிலை பா திப்புக்கு உள்ளாகியிருந்ததாக உள்ளூர் மாநில அவசர சேவை தளபதி மைக்கேல் டி ஃபிரிஸ்போம் தெரிவித்துள்ளார்.